Posts

Showing posts from September, 2018

காதலில் கரைந்திட

செங்கதிர் பரவிட இளந்தென்றல் வீசிட குயில்கள் கூவிட மரக்கிளைகள் ஆடிட புற்கள் வானம் பார்த்திட பசுக்கள் அவற்றை மேய்ந்திட வண்ணத்துப்பூச்சிகள் பறந்திட இசைத்தமிழில் பாடல் ஒலித்திட அன்னம் போல் அவள் வந்திட காத்திருந்த என்னை அவள் நோக்கிட "என்னவளே" என்று நான் விளித்திட அவள் கன்னங்கள் சிவந்திட வெட்கி தலைக் குனிந்திட இரு கைகள் கோர்த்திட தேகம் சிலிர்த்திட இரு மனம் இணைந்திட எல்லாம் இப்படி இருந்திட காதலில் கரைந்திட வேண்டும். காதலில் கரைந்திட வேண்டும்.

அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்

சிந்தனையில் திகட்டாத தேனாய் இனிக்கும் தமிழில் முதல் வணக்கம் அண்ணன்களே! அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்! என்னடா இவன் பழமொழிய மாத்தி எழுதி வச்சி இருக்கான்னு பார்க்குறது தெரியுது! நேரா விஷயத்துக்கே வரேன்.  ஒரு எருமைய மேய்க்குறதே கஷ்டம் ன்னு என்னை மட்டும் பெத்துக்கிட்டாங்க என் அப்பா அம்மா. இதுல அப்ப அப்ப நெய்வேலி வில்லுடையான்பட்டு கோவிலிருந்து தத்து எடுத்தோம் ன்னு பொய் வேற. அதுக்கு அப்புறம் ஐஞ்சு வகுப்புல விடுதி ல சேர்ந்ததுலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் எல்லாமே என் அண்ணங்க தான். பள்ளி படிக்குறப்ப எனக்கும் என் மலேசிய நண்பருக்கும் ஒரே அண்ணன் தான் பொறுப்பு. என் அம்மா கூட என்னை அப்படி பார்த்துக்க மாட்டாங்க. அண்ணன் பாராட்டி சீராட்டி புத்திமதி சொல்லி வளர்த்தாங்க. பரீட்சைல என் மலேசிய நண்பன் முதல் மார்க் வாங்குவான். நான் மூன்றாவது நான்காவது மார்க் வாங்குவான். அப்ப எல்லாம் தலைலே வாங்குன குட்டு எல்லாம் தான் பள்ளி ல நல்ல மார்க் வாங்கி நல்ல கல்லூரி எடுக்க முடிந்தது. கல்லூரில எனக்கு கிடைச்ச அண்ணன்கள் வழிதவறி சென்ற படகுக்கு கிடைத்த கலங்கரை விளக்கம் போல. அரசு கல்லூரி ன்னா...