எதிர்நீச்சல் அடி!
தாய்ப்பால் போன்ற தமிழ்மொழியில் முதல் வணக்கம்! குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் போட்டது எதிர்நீச்சல்! ஏகாதிபத்தியத்தைத் தவிடுபொடியாக்கிய மாவீரன் சே குவேரா போட்டது எதிர்நீச்சல்! ஆங்கிலேயனை எதிர்த்து மாண்ட ஜாலியன் வாலா பாக் மக்கள் போட்டது எதிர்நீச்சல்! சமூக நீதி சமநீதி பறைசாற்றிய பெரியாரும் அம்பேத்கரும் போட்டது எதிர்நீச்சல்! பள்ளிகள் பல திறந்து கல்விக்கண் திறந்த காமராசர் போட்டது எதிர்நீச்சல்! பெண்ணடிமைத்தனம் ஒழிக்க ஆசிரியர் ஆன சாவித்திரி பாய் பூலே போட்டது எதிர்நீச்சல்! அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற நெல்சன் மண்டேலா போட்டது எதிர்நீச்சல்! இயற்கை சீற்றங்கள் படையெடுப்புகள் பல தாண்டி வாழும் செம்மொழி தமிழ்மொழி போட்டது எதிர்நீச்சல்! தவழும் குழந்தை தடுமாறி எழுகையில் போட்டது எதிர்நீச்சல்! தடுமாறும் நாம் அனைவரும் தினந்தினம் போட வேண்டியது எதிர்நீச்சல்! வாடா மச்சான் அடித்து பார்க்கலாம் எதிர்நீச்சல்!