Posts

Showing posts from October, 2019

தமிழாற்றுப்"படை"

கண்கள் வழியாக படித்து, வாய் வழியாக உச்சரித்து, செவி வழியாக கேட்டு, மனம் வழியாக உணர்ந்து இன்புற வழிசெய்யும் அன்னைத் தமிழில் முதல் வணக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு புத்தகத்தை முழுவதுமாக படித்தேன் என்றால் அது கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "தமிழாற்றுப்படை" புத்தகமே. ஒரு கவிஞனால் ஆகாத காரியம் என்ன? மலையை கடுகு ஆக்க முடியும். விண்ணை மண் ஆக்க முடியும். கடலை குடுவையில் அடக்க முடியும். அந்த வகையில் இந்த நூல் நம்மை காலச்சக்கரத்தில் பின் நோக்கி இழுத்து செல்கிறது. தமிழ் மொழி வளர்த்த அறிஞர் பெருமக்களின் பெருமைகளையும் அவர்தம் உழைப்பையும் சிந்தனைகளையும் நாம் இங்கு இருந்தே உணர வைப்பது இந்த தமிழாற்றுப்படை. 1)தமிழ் இலக்கண இலக்கிய வரையறை இயற்றிய தொல்காப்பியர் 2)இயற்கை அழகைப் போற்றி பாடிய கபிலர் 3)முதுமொழி வழங்கி பெண்ணுரிமை பேணிய அவ்வையார் 4)உலகப்பொதுமறை தந்த ஞானதகப்பன் திருவள்ளுவர் 5)கண்ணகிக்கு புகழ் சேர்த்த இளங்கோவடிகள் 6)சைவ சமயம் வளர்த்த அப்பர் பெருமான் 7)வைணவ சமயத்தின் பெண் ஆழ்வார் ஆண்டாள் 8)தமிழர் வீரத்தின் அடையாளமான கலிங்கத்துப் பரணி புகழ் செயங்கொண்டார் 9)ஆகச...