அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்

சிந்தனையில் திகட்டாத தேனாய் இனிக்கும் தமிழில் முதல் வணக்கம் அண்ணன்களே!

அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்!

என்னடா இவன் பழமொழிய மாத்தி எழுதி வச்சி இருக்கான்னு பார்க்குறது தெரியுது!
நேரா விஷயத்துக்கே வரேன். 

ஒரு எருமைய மேய்க்குறதே கஷ்டம் ன்னு என்னை மட்டும் பெத்துக்கிட்டாங்க என் அப்பா அம்மா.
இதுல அப்ப அப்ப நெய்வேலி வில்லுடையான்பட்டு கோவிலிருந்து தத்து எடுத்தோம் ன்னு பொய் வேற.

அதுக்கு அப்புறம் ஐஞ்சு வகுப்புல விடுதி ல சேர்ந்ததுலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் எல்லாமே என் அண்ணங்க தான்.

பள்ளி படிக்குறப்ப எனக்கும் என் மலேசிய நண்பருக்கும் ஒரே அண்ணன் தான் பொறுப்பு. என் அம்மா கூட என்னை அப்படி பார்த்துக்க மாட்டாங்க. அண்ணன் பாராட்டி சீராட்டி புத்திமதி சொல்லி வளர்த்தாங்க. பரீட்சைல என் மலேசிய நண்பன் முதல் மார்க் வாங்குவான். நான் மூன்றாவது நான்காவது மார்க் வாங்குவான். அப்ப எல்லாம் தலைலே வாங்குன குட்டு எல்லாம் தான் பள்ளி ல நல்ல மார்க் வாங்கி நல்ல கல்லூரி எடுக்க முடிந்தது.

கல்லூரில எனக்கு கிடைச்ச அண்ணன்கள் வழிதவறி சென்ற படகுக்கு கிடைத்த கலங்கரை விளக்கம் போல.

அரசு கல்லூரி ன்னா Ragging culture மோசமான இருக்கும் ன்னு நினைச்ச எங்களுக்கு கிடைத்த அண்ணன்கள் உடன்பிறவா சகோதரர்கள்.

சீனியர் ஜுனியர் மரியாதையைத் தாண்டி எல்லையில்லா அன்பு அண்ணன்கள் மேல்.
Party destination ஆன கோவாவுக்கு கூப்பிட்டு போன அத்தனை அண்ணன்களுக்கும் என் நன்றிகளைச் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். நீங்களின்றி இன்று நான் அரியர் பரீட்சை தான் எழுதிக் கொண்டு இருப்பேன்.

துறை ரீதியா சண்டை வந்தப்ப "வந்தா மலை, போல முடி" ன்னு நின்ன என்னை குண்டுக்கட்டாக தூக்கிட்டு போய் அடிச்சி திருத்தி படிக்க வைத்த அண்ணன்கள் தெய்வங்கள் ஆவர்.

கல்லூரி முடிந்த அப்புறம் தான் தெரிஞ்சுது, இத்தனை வருசம் விடுதி ல நண்பர்கள் அண்ணன்கள் இருந்தார்கள், இனிமே வீட்ல தனியா எப்படி உயிர் வாழ்றதுன்னு?

புதுசா சேர்ந்த வேலைல எதுவுமே தெரியல!
என்னடா B.E ல படிச்ச ன்னு செருப்பு சாணி ல முக்கி ஒரு அடி. (Insert Marudamalai vadivelu vendor begger template)

அப்ப ஆபத்பாந்தவனா வந்த அன்பான அண்ணன் Grease, Tar க்குள்ள உருண்டு பிரண்டு கத்துக்கொடுத்தட வச்சி தான் இப்ப ஒட்டிக்கிட்டு இருக்கேன்.

என்னை உடன்பிறந்தத் தம்பியாய் நினைத்துப் பழகிய அத்தனை அண்ணன்களையும் வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

நன்றி,
கடைக்குட்டி  புலி விக்னேஸ்வரன்

Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழாற்றுப்"படை"

எதிர்நீச்சல் அடி!