மழைக்காலம்
பேரன்புடைய தோழர்கள் தோழிகள் அண்ணன்கள் நண்பர்களுக்கு அன்பினூற்றாம் தமிழில் முதற்கண் வணக்கம்.
இந்த வருடம் பருவமழை அதிகமாய் பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மழைக்காலங்களில் நாம் எப்படி முன்னெச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று கீழே பதிவிட்டுள்ளேன்.
1) தேங்கும் தண்ணீரே பேராபத்து.
மழை ஓய்ந்த பின் வீட்டினைச் சுற்றி பார்த்து எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ அவற்றை உடனே அப்புறப்படுத்தி கழுவி விட வேண்டும்.
2) காய்ச்சல் வந்தால் தானாக சரியாகிவிடும் என்றோ வீட்டில் இருக்கும் மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று அலட்சியப்படுத்த வேண்டாம்.
தகுந்த மருத்துவரிடம் ஆலோசித்தப்பின் மாத்திரை மருந்துகள் சாப்பிடவும்.
காய்ச்சல் விரைவில் குணமடையவில்லையெனில் இரத்தப் பரிசோதனை செய்வது நல்லது.
3) மழை நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வழுக்கும் தார் சாலைகள் எதிரில் வேகமாய் வரும் வாகனங்கள் முலம் நம் வாகனத்தில் இருந்து நாம் நிலை தடுமாறும் வாய்ப்புள்ளது.
4) கனமழை பெய்யும் என்று முன்னரே அறிந்து இருந்தால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது.
5) வெளியில் செல்லும் போது கண்டிப்பாக குடையும் நீர்புகா மேற்சட்டையும் எடுத்துச் செல்வது நல்லது.
6) ஆரோக்கியம் காரணமாக மழைக்காலங்களில் தண்ணீரைக் காய்ச்சி குடிப்பது நல்லது.
7) மழை நேரங்களில் நெகிழி பைகளை வெளியில் வீசுவது தவறான செயலாகும்.
இந்த நெகிழி பைகள் ஏதாவது ஓர் இடத்தில் போய் குழாயையோ சாக்கடையையோ அடைத்து விட வாய்ப்புள்ளது.
8) தொலை தூர பயணங்களில் மறக்காமல் மின்னூட்டியை எடுத்துச் செல்லவும். தங்கள் இருப்பிடத்தை அவ்வப்போது பெற்றோர் நண்பர்கள் காதலிடம் தெரிவிப்பது நல்லது.
9) பனிக்கூழ் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு கொட்டும் மழையை ரசித்துக்கொண்டு சூடான காஃபி பருகுவது நல்லது.
மேற்கூறியவற்றை தெரிந்தவர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளவும் தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளவும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகிறேன்.
நன்றி
அன்பன்
விக்னேஸ்வரன் மு.
Dea macha nee kalakku da!!!
ReplyDeleteநன்றி டா!
Delete