இந்தி நமக்கு தேவையா?
அறிவார்ந்த தமிழ் சொந்தங்களுக்கு இனிய வணக்கங்கள் , கடந்த 14/09/19 அன்று இந்திய உள்துறை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தான "இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரே மொழியான இந்தி மொழி அவசியம்" என்று பதிவிட்டுள்ளார். https ://twitter.com/ AmitShah / status /1172698032728494082?s=20 இந்த கூற்றானது இன்று நேற்று அல்ல இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் இருந்தே இருந்து வருகிறது. நாட்டு மக்களில் பெரும்பாலோர் இந்தி மொழி பேசுகின்றனர் என்பதால் அனைவரும் இந்தி பேச வேண்டும் என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயலாகும். இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மை தான் அதன் ஆணிவேர். நாட்டின் குறுக்கும் நெடுக்கும் பல்வேறு மொழி, இன, பண்பாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பதே நம் மக்களின் சிறப்பம்சம். கண்ணை மூடிக்கொண்டு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் என்பது அறிவிலித்தனம். https://www.nationsonline.org/oneworld/european_languages.htm https://www.newworldencyclopedia.org/entry/Languages_of_India இந்திய ஒன்றியம் குடியரசு பெற்றபின...