தமிழாற்றுப்"படை"
கண்கள் வழியாக படித்து, வாய் வழியாக உச்சரித்து, செவி வழியாக கேட்டு, மனம் வழியாக உணர்ந்து இன்புற வழிசெய்யும் அன்னைத் தமிழில் முதல் வணக்கம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு புத்தகத்தை முழுவதுமாக படித்தேன் என்றால் அது கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "தமிழாற்றுப்படை" புத்தகமே.
ஒரு கவிஞனால் ஆகாத காரியம் என்ன?
மலையை கடுகு ஆக்க முடியும். விண்ணை மண் ஆக்க முடியும். கடலை குடுவையில் அடக்க முடியும். அந்த வகையில் இந்த நூல் நம்மை காலச்சக்கரத்தில் பின் நோக்கி இழுத்து செல்கிறது.
தமிழ் மொழி வளர்த்த அறிஞர் பெருமக்களின் பெருமைகளையும் அவர்தம் உழைப்பையும் சிந்தனைகளையும் நாம் இங்கு இருந்தே உணர வைப்பது இந்த தமிழாற்றுப்படை.

1)தமிழ் இலக்கண இலக்கிய வரையறை இயற்றிய தொல்காப்பியர்
2)இயற்கை அழகைப் போற்றி பாடிய கபிலர்
3)முதுமொழி வழங்கி பெண்ணுரிமை பேணிய அவ்வையார்
4)உலகப்பொதுமறை தந்த ஞானதகப்பன் திருவள்ளுவர்
5)கண்ணகிக்கு புகழ் சேர்த்த இளங்கோவடிகள்
6)சைவ சமயம் வளர்த்த அப்பர் பெருமான்
7)வைணவ சமயத்தின் பெண் ஆழ்வார் ஆண்டாள்
8)தமிழர் வீரத்தின் அடையாளமான கலிங்கத்துப் பரணி புகழ் செயங்கொண்டார்
9)ஆகச்சிறந்த கவியான கம்பர்
10)திருமந்திரம் அருளிய சித்தர் பெருமான் திருமூலர்
11)அயல்நாட்டு அறிஞன் தமிழ் தொண்டாற்றிய கால்டுவெல் ஐயன்
12)கொல்லாமை கொள்கை பரப்பிய வள்ளலார் இராமலிங்க அடிகளார்
13)தம் மெய் உறுத்தி தமிழ் இலக்கண இலக்கியங்களை அச்சில் ஏற்றிய தமிழ் தாத்தா
14)தனித்தமிழ் பெருமைக்கு மேன்மேலும் பெருமை ஊட்டிய மறைமலையடிகள்
15)தேசியம் பாடி உணர்ச்சிகளை கிளப்பிய மகாகவி பாரதியார்
16)காட்டுமிராண்டி மொழியை அறிவியல் பாதைக்கு திருப்பி சுயமரியாதை சுடர் ஏற்றிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
17)பாரதியின் உணர்வு கொண்ட திராவிடத்தின் கவிஞர் பாரதிதாசன்
18)தமிழ் சிறுகதைகளின் முன்னோடி புதுமைப்பித்தன்
19)இந்நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா
20)பட வசனங்களால் தமிழுணர்வை தட்டியெழுப்பிய கலைஞர் கருணாநிதி
21)காதலுக்கு ஒரு கண்ணதாசன்
22)புரட்சி பாடலுக்கு ஒரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
23)விளிம்பு நிலை மக்களின் உணர்வை கதையாக்கிய ஜெயகாந்தன்
24)கவிக்கோ அப்துல் ரகுமான்
என்று இத்தனை பெருமைமிக்கவர்களையும் நம்மிடம் காட்சிப் படுத்துகிறார் கவிப்பேரரசு.
திருவள்ளுவரைப் பற்றி எழுதும் போது நம் அனைவருக்கும் தெரிந்த நட்பு இலக்கண குறளான "உடுக்கை இழந்தவன் கைப்போல"
என்பதில் வள்ளுவன் எப்படி சொற்களை கையாண்டு உள்ளார் என்பதைப் படிக்க படிக்க வியப்பாய் இருக்கிறது.
"உடுக்கை" என்னும் சொல் ஆண்கள் ஆடைகளையும் குறிக்கும், பெண்கள் ஆடைகளையும் குறிக்கும். அன்றுள்ள வேட்டி சேலை முதல் இன்றுள்ள பேண்ட் சுடிதார் வரை தன் மனக்கண்ணால் உணர்ந்து குறள் இயற்றியுள்ளார் திருவள்ளுவர்.

கம்பராமாயணத்தில் வரும் ஒரு பாடலில் கம்பனின் கவிதை நயம் மழையாய் பொழிகிறது.
"விண்ணவர்க்கு ஆக்கிய முனிவர் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மண்ணின் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்"
மேலோட்டமான பொருள் பார்த்தால் இராம இலக்குவன் வேள்வியை கண் இமைப்போல காத்தனர் என்பதாகும். ஆனால் கம்பனின் கண்கள் கொண்டு உட்பொருள் பார்த்தால் "இமையிற் காத்தனர்" என்பதில் நுண்ணறிவு உள்ளது. கண் இமையில் மேலிமை, கீழிமை என்று இரண்டு உள்ளது. மேலிமை அசையும். கீழிமை அசையா. கீழிமையாகிய இலக்குவன் அசையாது ஓர் இடத்தில் நின்று வேள்வியை காவல் புரிகிறான். மேலிமையாகிய இராமனோ அசைந்து வேள்வியை சுற்றி வந்து ஒவ்வொரு முறையும் இலக்குவனை தொட்டு செல்கிறான் மேலிமை கீழிமையை ஒவ்வொரு முறை தொடுவது போல்.
படிப்பதில் இன்பம். உணர்வதில் பேரின்பம்.

தமது கவிதைகளாலும் பாட்டுகளாலும் கட்டிப்போட்டு வைத்து இருந்த வைரமுத்து இம்முறை வரலாற்று கட்டுரைகளால் நம்மை ஆட்கொள்கிறார்.
கலைஞர் பற்றிய கட்டுரையில் ஒரு சொற்றொடர்.
"தமிழர் இருந்த பள்ளத்துக்கு தமிழைத் தாழ்த்தாமல், தமிழ் இருந்த உயரத்திற்கு தமிழரை உயர்த்திட வேண்டும்"
"தமிழர் இருந்த பள்ளத்துக்கு தமிழைத் தாழ்த்தாமல், தமிழ் இருந்த உயரத்திற்கு தமிழரை உயர்த்திட வேண்டும்"
தமிழின் பெருமை விண்ணை முட்டுகிறது. தமிழர் நிலையோ அதளபாதாளத்தில் தொங்குகிறது.
தமிழர் நிலை உயர்த்த தமிழன்னை துணைக்கொண்டு இலக்கிய இலக்கணத்தால் அறம் பொருள் இன்பம் வீடு காண களம் கண்டவர்கள் கொண்ட படை இந்த தமிழாற்றுப்"படை".
வைரமுத்துவின் அறச்சீற்றம் "தமிழாற்றுப்படை"
நன்றி
விக்னேஸ்வரன் மு
விக்னேஸ்வரன் மு
செறிந்த சிந்தனை... மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்
ReplyDeleteகண்டிப்பாக நண்பா 😍
Delete