Posts

தமிழாற்றுப்"படை"

கண்கள் வழியாக படித்து, வாய் வழியாக உச்சரித்து, செவி வழியாக கேட்டு, மனம் வழியாக உணர்ந்து இன்புற வழிசெய்யும் அன்னைத் தமிழில் முதல் வணக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு புத்தகத்தை முழுவதுமாக படித்தேன் என்றால் அது கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "தமிழாற்றுப்படை" புத்தகமே. ஒரு கவிஞனால் ஆகாத காரியம் என்ன? மலையை கடுகு ஆக்க முடியும். விண்ணை மண் ஆக்க முடியும். கடலை குடுவையில் அடக்க முடியும். அந்த வகையில் இந்த நூல் நம்மை காலச்சக்கரத்தில் பின் நோக்கி இழுத்து செல்கிறது. தமிழ் மொழி வளர்த்த அறிஞர் பெருமக்களின் பெருமைகளையும் அவர்தம் உழைப்பையும் சிந்தனைகளையும் நாம் இங்கு இருந்தே உணர வைப்பது இந்த தமிழாற்றுப்படை. 1)தமிழ் இலக்கண இலக்கிய வரையறை இயற்றிய தொல்காப்பியர் 2)இயற்கை அழகைப் போற்றி பாடிய கபிலர் 3)முதுமொழி வழங்கி பெண்ணுரிமை பேணிய அவ்வையார் 4)உலகப்பொதுமறை தந்த ஞானதகப்பன் திருவள்ளுவர் 5)கண்ணகிக்கு புகழ் சேர்த்த இளங்கோவடிகள் 6)சைவ சமயம் வளர்த்த அப்பர் பெருமான் 7)வைணவ சமயத்தின் பெண் ஆழ்வார் ஆண்டாள் 8)தமிழர் வீரத்தின் அடையாளமான கலிங்கத்துப் பரணி புகழ் செயங்கொண்டார் 9)ஆகச...

இந்தி நமக்கு தேவையா?

அறிவார்ந்த தமிழ் சொந்தங்களுக்கு இனிய வணக்கங்கள் , கடந்த 14/09/19 அன்று இந்திய உள்துறை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தான "இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரே மொழியான இந்தி மொழி அவசியம்" என்று பதிவிட்டுள்ளார். https ://twitter.com/ AmitShah / status /1172698032728494082?s=20 இந்த கூற்றானது இன்று நேற்று அல்ல இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் இருந்தே இருந்து வருகிறது. நாட்டு மக்களில் பெரும்பாலோர் இந்தி மொழி பேசுகின்றனர் என்பதால் அனைவரும் இந்தி பேச வேண்டும் என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயலாகும். இந்திய ஒன்றியத்தின்  பன்முகத்தன்மை தான் அதன் ஆணிவேர். நாட்டின் குறுக்கும் நெடுக்கும் பல்வேறு மொழி, இன, பண்பாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பதே நம் மக்களின் சிறப்பம்சம். கண்ணை மூடிக்கொண்டு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் என்பது அறிவிலித்தனம். https://www.nationsonline.org/oneworld/european_languages.htm https://www.newworldencyclopedia.org/entry/Languages_of_India இந்திய ஒன்றியம் குடியரசு பெற்றபின...

என் பார்வையில் Sterlite copper தூத்துக்குடி

ஆதி அந்தம் என்று முடிவில்லா தமிழில் முதல் வணக்கம் . நான் கடந்த இரண்டு வருடங்களாக தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைப் பார்த்து வருகிறேன். ஸ்டர்லைட் நிறுவனம் பற்றி ப...

என் வாழ்வே! என் காதலே!

Image
என் அன்பே! என் காதலே!❤ என் வாழ்வே! உந்தன் பேச்சினில் வாழ்கிறது என் வாழ்வும் என் காதலும்!殺 உந்தன் கண் அசைவில் விடிகிறது என் வாழ்வும் என் காதலும்! உந்தன் மூச்சினில் சுவாசிக்கிறது என் வாழ்வும் என் காதலும்! உந்தன் மனதில் துடிக்கிறது என் வாழ்வும் என் காதலும்! உந்தன் மயக்கும் இசையில் சாய்கிறது என் வாழ்வும் என் காதலும்! உந்தன் புன்னகையில் இன்புறுகிறது என் வாழ்வும் என் காதலும்! உந்தன் உயிரில் வாழ்கிறது என் வாழ்வும் என் காதலும்!❤ என் வாழ்வே! என் காதலே!❤ என் அன்பே!

மழைக்காலம்

பேரன்புடைய தோழர்கள் தோழிகள் அண்ணன்கள் நண்பர்களுக்கு அன்பினூற்றாம் தமிழில் முதற்கண் வணக்கம். இந்த வருடம் பருவமழை அதிகமாய் பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்த...

எதிர்நீச்சல் அடி!

தாய்ப்பால் போன்ற தமிழ்மொழியில் முதல் வணக்கம்! குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் போட்டது எதிர்நீச்சல்! ஏகாதிபத்தியத்தைத் தவிடுபொடியாக்கிய மாவீரன்  சே குவேரா போட்டது எதிர்நீச்சல்! ஆங்கிலேயனை எதிர்த்து மாண்ட ஜாலியன் வாலா பாக் மக்கள் போட்டது எதிர்நீச்சல்! சமூக நீதி சமநீதி பறைசாற்றிய பெரியாரும் அம்பேத்கரும் போட்டது எதிர்நீச்சல்! பள்ளிகள் பல திறந்து கல்விக்கண் திறந்த காமராசர் போட்டது எதிர்நீச்சல்! பெண்ணடிமைத்தனம் ஒழிக்க ஆசிரியர் ஆன சாவித்திரி பாய் பூலே போட்டது எதிர்நீச்சல்! அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற நெல்சன் மண்டேலா போட்டது எதிர்நீச்சல்! இயற்கை சீற்றங்கள் படையெடுப்புகள் பல தாண்டி வாழும் செம்மொழி தமிழ்மொழி போட்டது எதிர்நீச்சல்! தவழும் குழந்தை தடுமாறி எழுகையில் போட்டது எதிர்நீச்சல்! தடுமாறும் நாம் அனைவரும் தினந்தினம் போட வேண்டியது எதிர்நீச்சல்! வாடா மச்சான் அடித்து பார்க்கலாம் எதிர்நீச்சல்!

பொறியாளனே! துவண்டு போகாதே!

பொறியாளர் பெருமக்களுக்கு செம்மொழியாம் தமிழில் முதற்கண் வணக்கங்கள். முகநூலில் ஆங்காங்கே பொறியியல் படிப்பையும் பொறியியல் படித்தவர்களையும் ஏளனம் செய்வதைக் கண்டேன். பெரும்பாலானோர் ஏன் பொறியியல் படித்தோம் என்று எண்ணுகின்றனர். நான் வேலையில் கற்றுக் கொண்ட ஒன்றை மேற்கோள் இடுகிறேன். "நாம் அன்றாடம் செய்யும் வேலையை நம்மை விட குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய பணியாளர்கள் பற்பல இருக்கின்றனர்" " ஒரு பொறியாளனின் தகுதி/ திறமையானது ஒரு வேலையை எந்த அளவு துரிதமாகவும் எந்த அளவு சிறப்பாகவும் எந்த அளவு பொருள், நேரம், பண சேமிப்புடன் செய்வதில் தான் இருக்கிறது" பொறியியல் எங்கே தான் இல்லை! நாம் தினமும் பயணிக்கும் வாகனங்களில் பொறியாளனின் உழைப்பு இருக்கிறது! நாம் வசிக்கும் வீட்டினை, வேலை பார்க்கும் அலுவலகத்தைச் சீரென அமைத்ததில் பொறியாளனின் கடமை இருக்கிறது! நாம் பயன்படுத்தும் கைப்பேசியில் உள்ள ஒவ்வொரு தொழில்நுட்பமும் மென்பொருளும் பொறியாளனின் இலட்சியம் இருக்கிறது! வீடு முழுவதும் ஒளி பரப்ப மின்சார உற்பத்தியில் பணியாற்றும் பொறியாளனின் உழைப்பு நாட்டிற்கு உயிராய் இருக்கிறது! மருத்த...